விதிமீறி விபத்தில் சிக்கிய வேன்
திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து மதுரைக்கு கான்கிரீட் பணிகளுக்கான கம்பிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்றது. விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தின் மேல் பகுதியில் கயிறால் மட்டும் இந்த கம்பிகள் கட்டப்பட்டு இருந்தன. கப்பலுார் சிட்கோவில் இருந்து நான்கு வழிச்சாலையில் திரும்பும் போது, அதிக எடை காரணமாக வாகனம் கம்பிகளோடு ரோட்டில் கவிழ்ந்தது.அதேநேரத்தில் பெரிய வாகனங்கள், டூவீலர்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வாகனத்தின் டிரைவரும் காயம் இன்றி தப்பினார். இதையடுத்து நெடுஞ்சாலை மீட்புக் குழுவினர் கிரேன் உதவியுடன் ரோட்டில் கவிழ்ந்த வாகனத்தை மீட்டனர். உடனுக்குடன் கம்பியையும் அப்புறப்படுத்தினர்.