உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வந்தே மாதரம் கொண்டாட்டம்

வந்தே மாதரம் கொண்டாட்டம்

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், 'வந்தே மாதரம்' தேசிய பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம் துவங்கியது. அரசரடி ரயில்வே மைதானத்தில் ரயில்வே பள்ளி மாணவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் என 900 பேர் வந்தே மாதரம் பாடினர். இப்பாடலின் முக்கியத்துவம் குறித்து கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பேசினார். நவ.14 வரை துவக்க விழா கொண்டாட்டம், 2026 ஜன., 19 முதல் 26 வரை குடியரசு தின வாரம், ஆக., 7 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ணக்கொடி கொண்டாட்டம், நவ., 1 முதல் 7 வரை நிறைவு வார நிகழ்ச்சிகள் என 4 கட்டங்களாக ஓராண்டிற்கு இதன் கொண்டாட்டங்கள் தொடரவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ