மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
12-Mar-2025
மதுரை: மதுரையில் 27 பேருக்கான பணிமாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை ஆர்.டி.ஓ., நிர்வாகத்தின் கீழ் மதுரை மேற்கு, வடக்கு, வாடிப்பட்டி தாலுகாக்கள் உள்ளன. இத்தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் 27 பேருக்கு மார்ச் 20ல் இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இது வி.ஏ.ஓ.,க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த வி.ஏ.ஓ.,க்கள் வளாகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்றனர். ஆர்.டி.ஓ., ஷாலினியை சந்தித்து இதுபற்றி கேட்டனர். முடிவு எட்டப்படாமல் மாலை வரை பேச்சு வார்த்தை தொடர்ந்தது. இதையடுத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் ஜெயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதலுக்கு கவுன்சிலிங் நடத்த அரசாணை உள்ளது. மேலும் மூன்று மாதங்களில் ஜமாபந்தி முடிந்து புதிய பசலி ஆண்டு துவங்க உள்ளது. அதன்பின் இடமாறுதல் வழங்கும் வகையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். மேலும் அரசாணை 515ல் ஏ கிராமங்களில் ஓராண்டு பணிமுடித்தோருக்கும், பி கிராமங்களில் 3 ஆண்டுகள் பணிமுடித்தோருக்கும் மாறுதல் வழங்க வேண்டும். அதையும் மீறி செய்வதால் இடமாறுதலை மறுக்கிறோம்'' என்றனர்.
12-Mar-2025