உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வர்மக்கலை போட்டி: மதுரை சாம்பியன்

வர்மக்கலை போட்டி: மதுரை சாம்பியன்

மதுரை: மதுரை விராட்டிப்பத்தில் மஞ்சா வர்மக்கலை பயிற்சி பள்ளி சார்பில் குத்துவரிசை சண்டைபோட்டிகள் நடந்தன.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள், அமெச்சூர் பிரிவுகளில் போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. ஆண்களுக்கான 30 - 40 கிலோ பிரிவில் முகம்மது முதல் இடம், கவிஸ்குமார் 2ம் இடம், விஷால் 3 ம் இடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் பசும்பொன், ஸ்ரீநிஷா, ஜானவி முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.ஆண்கள் பிரிவில் 50 - 60 கிலோ பிரிவில் ரோகித், வேல்ராஜ், அசோக்குமார், 61-70 கிலோ பிரிவில் சுந்தர் பிச்சை மணி, பீட்டர் வசந்தகுமார், கணேசன், 71 - 80 கிலோ பிரிவில் பழனிச்சாமி, அழகர் சாமி, யோகராஜ், 81 - 90 கிலோ பிரிவில் பாரதி நாயகம், சண்முகசுந்தரம், தமின் வென்றனர்.ஒட்டுமொத்த 'ஹெவிவெயிட்' சாம்பியன் பட்டத்தை மஞ்சா வர்மக்கலை பள்ளி வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி