உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலம்மாள் பள்ளி மாணவரான உலக செஸ் சாம்பியன் குகேஷ்

வேலம்மாள் பள்ளி மாணவரான உலக செஸ் சாம்பியன் குகேஷ்

மதுரை : சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். தனது செஸ் பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார். திறமையை வளர்ப்பதில் பெயர் பெற்ற வேலம்மாள் கல்வி குழுமம் வழங்கிய வலுவான கல்வி மற்றும் அடித்தளத்தால் குகேஷ் வளர்க்கப்பட்டார். பள்ளி ஆரம்பத்திலேயே அவரின் திறமை சாத்தியமானது என்று அடையாளம் காணப்பட்டது. அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ள தேவையான ஆதரவும் வழங்கப்பட்டது. தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனவீரர் டிங் லிரனை வென்று இளம்வயதில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். 2024 ல் இந்திய செஸ் எப்.ஐ.டி.இ.' தரவரிசையை அடைந்த இளையவர்களில் ஒருவரானார். குகேஷ் சாதனையை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VSMani
டிச 16, 2024 12:52

தினமலர் வேலம்மாள் பள்ளிக்கு நன்றாக விளம்பரம் செய்கிறது


M. ANANTHARAJ
டிச 15, 2024 10:37

குகேசுக்கு வாழ்த்துக்கள் தமிழக அரசு பரிசு வழங்குவதில் இன பாகுபாடு பார்க்கிறது என சமூக வலைத்தளம் மூலம் அறிகிறோம் அவ்வாரு இருந்தால் அது தவறு.. தெலுங்கு இனத்தை சேர்த இவருக்கு 5 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது ஆனால் தமிழர்கள் வென்றால் பரிசு தொகை 2 கோடியோடு முடிந்து விடுகிறது ஏன்? என மக்கள் கேட்கிறார்கள் . தமிழக மக்கள் வாக்கால் தான் நீங்க ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை மற ந்திட வேண்டாம் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை