வேலுார் இப்ராஹிமுக்கு மீண்டும் வீட்டுச்சிறை
மதுரை : பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம் வைகையில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க நேற்றுமுன்தினம் மதுரை வந்தார். புதுார் மண்மலை மேட்டில் உள்ள நிர்வாகி சிரில் ராயப்பன் வீட்டில் தங்கியிருந்த அவரை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்தனர்.இப்ராஹிம் கூறுகையில், ''பா.ஜ.,வின் முஸ்லிம் நிர்வாகி, கள்ளழகரை தரிசிக்க சென்றால் பா.ஜ., மதவாத கட்சி என தி.மு.க., கூறுவது தகர்ந்துவிடும் என்பதால் அனுமதி மறுக்கின்றனர்'' என்றார்.சில நாட்களுக்கு முன் திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த போதும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.