உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரசாதமாக வந்த கலப்பட லட்டு வி.எச்.பி., பொதுச்செயலர் வருத்தம் * வி.எச்.பி., பொதுச்செயலர் வருத்தம்

பிரசாதமாக வந்த கலப்பட லட்டு வி.எச்.பி., பொதுச்செயலர் வருத்தம் * வி.எச்.பி., பொதுச்செயலர் வருத்தம்

மதுரை, “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.“அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை நடந்தபோதும் இத்தகைய கலப்பட பிரசாதமே திருப்பதியில் இருந்து அனுப்பப்பட்டது,” என, மதுரையில் வி.எச்.பி., சர்வதேச பொதுச் செயலர் பஜ்ரங் லால் பாக்ரா வருத்தம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளன. ஹிந்துக்களின் உணர்வு, நம்பிக்கை சிதைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை நடந்தபோதும் இத்தகைய கலப்பட பிரசாதமே திருப்பதியில் இருந்து அனுப்பப்பட்டது.இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது கொலையை விட கொடிய செயல். இதற்கு பின் உள்ள அரசியல் எங்களுக்கு தெரியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.கோவில்களை நிர்வகிப்பதில் இருந்து அரசு வெளியேற வேண்டும். மதச்சார்பற்ற நாட்டில், கோவில்களை மட்டும் நிர்வகிப்பது அரசின் வேலையல்ல.ஆந்திரா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களிலும் கோவில் சொத்துக்கள் அரசால் சுரண்டப்படுகின்றன.எனவே, மத்திய அரசு தலையிட்டு இதுகுறித்து சட்டம் இயற்றி, மாநில அரசுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஹிந்து சமூகத்திடமே கொடுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 21, 2024 09:06

இந்து சமூகத்தில் உள்ளவர்கள் நேர்மையானவர்களா.நேர்மையானவர்களாக இல்லாததால் சாதி அடிப்படையில் மரியாதையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவ மரியாதையம் செய்கின்றனர்.அவர்களிடம் கோயில்களை ஒப்படைத்தால் தாழ்த்தப்பட்டவர்களை கோயில்களின் உள்ளே சேர்க்க மாட்டார்கள். குற்றவாளிகள் எங்கும் விரவி இருக்கின்றனர்.