முருக பக்தர்கள் மாநாடு முதல்வர் பங்கேற்பாரா வி.எச்.பி., கேள்வி
மதுரை: எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வாரா' என விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரையில் அவர் கூறியதாவது: மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை அழைப்பதற்கு விழா குழுவினர் அனுமதி கேட்டு, தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை. தான் மதச்சார்பற்ற முதல்வர் எனக் கூறும் முதல்வர் இம்மாநாட்டில் பங்கேற்று அதை உறுதிசெய்ய வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உண்மையான ஹிந்துக்கள் செல்ல மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு, அவமதிக்கும் வகையில் பேசுவதை ஏற்கமுடியாது. அவர்மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநாட்டிற்கு தேவையான வசதிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.