உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய கராத்தேயில் வெற்றி

தேசிய கராத்தேயில் வெற்றி

பாலமேடு: சேலத்தில் ஆல் இந்தியா கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 12,14,17 வயது கட்டா பிரிவில் மணிஸ், சுர்கித், மோனிஸ்கர், சவ்பர்னிகா, யுகேஸ்,கிருசிக்குமார், திபாகர், கவியரசு, சுவானிகா முதலிடம், கோகுல், மகிழினி 2ம் இடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் அருணாச்சலவேல் பாண்டியன், துணைத் தலைவர் சிவாஜி, செயலாளர் மயில்வாகனன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், பள்ளி முதல்வர் ரதிபிரியா, பயிற்சியாளர் பாலகுரு, பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை