மேலும் செய்திகள்
விஸ்வகர்மா ஜெயந்தி விழா சுவாமி ஊர்வலம்
19-Sep-2025
மதுரை : மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில் விஸ்வபிரம்ம ஜெயந்தி நடந்தது. மாநில தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: விஸ்வகர்மா சமுதாயம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி விஸ்வகர்மா தினமாக செப்.17ஐ அறிவித்ததற்கு நன்றி. சட்டசபை தேர்தலில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு அதிக பிரதிநித்துவம் தரும் கட்சிக்கே ஆதரவு. மத்திய, மாநில அமைச்சரவையிலும் இடம் அளிக்க வேண்டும். தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'விஸ்வர்கர்மா யோஜனா' திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் நாகராஜன் உடன் இருந்தனர்.
19-Sep-2025