வ.உ.சி., சமூக நலப்பேரவை விழா
மதுரை : திருப்பரங்குன்றத்தில் தியாகத் திருவுருவம் வ.உ.சிதம்பரனார் சமூக நலப்பேரவை விழா நடந்தது. தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். வ.உசி., யின் பேரன் சிதம்பரம், எழுத்தாளர் ப.திருமலை, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் அழகப்பன் பேசினர். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அவர் பேசுகையில், 'வ.உ.சி., சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நுால்களுக்கு எளிய நடையில் உரை எழுதியுள்ளார்; செல்வந்தராக பிறந்தாலும், தேச விடுதலைக்காக வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழித்தார்' என்றார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஆசிரியர் அருணகிரி, மதுரை உலா நற்பணி மன்ற தலைவர் கார்த்திகேயன், பாலு, குடந்தை ரகுநாதன், வழக்கறிஞர் ராமலிங்கம், சோமசுந்தரம் பங்கேற்றனர்.துணைச் செயலாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார்.