உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகை அணை தண்ணீர் திறப்பு அளவு குறைப்பு

வைகை அணை தண்ணீர் திறப்பு அளவு குறைப்பு

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.இந்த அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசனப்பகுதி 1, 2, 3ல் உள்ள நிலங்களுக்காக நவ., 10 முதல் டிச., 8 வரை மொத்தம் 3000 மி.கன அடி நீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து முதல் நாளான நவ.,10 ல் வைகை பூர்வீக பாசனப் பகுதி 3ல் உள்ள நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு 3ம் நாளான நேற்று வினாடிக்கு 2500 கன அடியாக குறைக்கப்பட்டது. நாளை வரை வினாடிக்கு 2500 கனஅடியாக வெளியேறும் நீரின் அளவு அடுத்தடுத்த நாட்களில் 2000 கனஅடியாகவும், 1681 கன அடியாகவும் குறைக்கப்பட்டு நவ., 18ல் நிறுத்தப்படும்.வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு மீண்டும் நவ., 20 ல் வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர் திறக்கப்படும் என்று நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ