உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தனியார் மூலம் துாய்மைப் பணி மேற்கொள்வதை கைவிட வேண்டும் மாநகராட்சியில் காத்திருப்பு போராட்டம்

தனியார் மூலம் துாய்மைப் பணி மேற்கொள்வதை கைவிட வேண்டும் மாநகராட்சியில் காத்திருப்பு போராட்டம்

மதுரை: 'மதுரை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் துாய்மைப் பணி மேற்கொள்வதை கைவிட வேண்டும்' என துப்புரவுப் பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.மதுரை மாநகராட்சியில் 'அவர்லேண்ட்' எனும் தனியார் நிறுவனம் மூலம் துாய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனை கைவிட வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்கம், துாய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு இயக்கம் சார்பில் நுாற்றுகணக்கானோர் நேற்று காலை முதல் மாநகராட்சி வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சி.ஐ.டியு., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''தனியார் மூலம் துாய்மைப் பணி செய்வதை கைவிட ஜூன் 18ல் போராட்டம் நடந்தது. அதன்பின் பேச்சு வார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.தனியார் நிறுவனம் துப்புரவுப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் பணிநீக்கம் செய்கின்றனர். அந்நிறுவன பணியாளர்கள் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்.

தயிர் மார்க்கெட் கடைகள்

மதுரை, கீழமார்ட் வீதி தயிர் மார்க்கெட்டில்புதிய கட்டடம் பிப்.15 ல் திறக்கப்பட்டது. இதில் ஏற்கனவே கடை வைத்திருந்த 115 பேருக்குமுன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை நகர் சாலையோரம், மார்க்கெட் விற்பனையாளர் சங்கத்தினரும் நேற்று மாநகராட்சியில் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை