உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உங்கள் ‛ஐ.ஏ.எஸ்., கனவு நனவாக வேண்டுமா; மதுரையில் இன்று தினமலர் வழிகாட்டுகிறது

உங்கள் ‛ஐ.ஏ.எஸ்., கனவு நனவாக வேண்டுமா; மதுரையில் இன்று தினமலர் வழிகாட்டுகிறது

மதுரை; தினமலர் நாளிதழ், வஜ்ரம் அன்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்ஸாமினேஷன் இணைந்து நடத்தும் 'நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம்' நிகழ்ச்சி, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்று (டிச.,15 ஞாயிற்றுக்கிழமை)காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கனவில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில் ஆண்டுதோறும் 'நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம்' நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ்நடத்துகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டி, உயரிய அரசு பணிகளை பெற எவ்வாறு தயாராக வேண்டும் என்ற 'சக்சஸ் மந்திரத்தை' கற்றுத்தரும் நிகழ்ச்சியாக இது அமையும்.குறிப்பாக சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராவது எப்படி, விருப்பத்தாள்களை தேர்வு செய்வது எப்படி, பிரிலிமினரி, மெயின் தேர்வு மற்றும் இன்டர்வியூவில் சாதிக்கும் திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, இத்தேர்வுகளில் வெற்றி பெற எவ்வாறு திட்டமிடுவது போன்ற அரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்., சாதனையாளர்களான விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், வருமான வரித்துறை இயக்குநர் நந்தகுமார், முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியும் வஜ்ரம் அன்ட் ரவி இன்ஸ்டிடியூட் பயிற்றுனருமான ஸ்ரீவத்சன் ஆகியோர் பேச உள்ளனர். பங்கேற்பதற்கு விருப்பம் உள்ளவர்கள் 95667 77833 என்ற எண்ணில் 'IAS' என வாட்ஸ்அப்பில் அனுப்பி இலவசமாக முன்பதிவு செய்யலாம். அல்லது இங்கு கொடுக்கப்பட்டுள்ள 'கியூஆர் கோடு'ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம். இளைஞர்களே... உங்கள் 'ஐ.ஏ.எஸ்., கனவு' நனவாக அவசியம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாரீர்.அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !