உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வக்பு வாரிய மசோதா பிரசார குழு ஆலோசனை

வக்பு வாரிய மசோதா பிரசார குழு ஆலோசனை

மதுரை : வக்பு வாரியத்தின் பணிகளை நெறிப்படுத்தவும், வக்பு வாரிய சொத்துக்களின் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் வக்பு திருத்த மசசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இம்மசோதா பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் உறுப்பினராக மாநில செயலாளர் வெங்கடேசன், தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், அமைப்பு சாரா மக்கள் மேம்பாட்டு பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஷ்ராஜா ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் நேற்று மதுரையில் ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து வேலுார் இப்ராஹிம் கூறியதாவது: பாதிக்கப்படுவோர் இந்துக்களோ, முஸ்லிம்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பார்வையில் உருவானது வக்பு திருத்த சட்ட மசோதா.இதனை தி.மு.க., தவறாக பிரசாரம் செய்வதை பா.ஜ., கண்டிக்கிறது. வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக பேசுவதற்கு பதிலடி கொடுக்க உள்ளோம். தி.மு.க., பார்லிமென்டில் ஒருவிதமாகவும், தமிழகத்தில் ஒருவிதமாகவும் நடிக்கிறது. தி.மு.க.,வின் இந்த வலையில் முஸ்லிம்கள் பலியாகிவிடக்கூடாது. அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி