உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் தின கிராம சபை மார்ச் 29க்கு ஒத்திவைப்பு வளர்ச்சி அலுவலர் போராட்டம் ரத்து

தண்ணீர் தின கிராம சபை மார்ச் 29க்கு ஒத்திவைப்பு வளர்ச்சி அலுவலர் போராட்டம் ரத்து

மதுரை : மார்ச் 22 ல் தண்ணீர் தின கிராம சபை கூட்டம் நடக்க இருந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மார்ச் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.மார்ச் 22 சனிக்கிழமையன்று உலக தண்ணீர் தின நாளில் மாநிலம் முழுதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது. பின் மார்ச் 23 ஞாயிறுக்கு மாற்றப்பட்டது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் விடுமுறை நாளில் கிராம சபை கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நேற்று மாலை ஒருமணி நேர வெளிநடப்பு போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில் அரசு தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தை மார்ச் 29க்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ''துறை சார்ந்த 21 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அதற்காக நாளை (மார்ச் 20) சென்னை இயக்குநர் அலுவலகத்தில் முறையிட உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி