உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர் மேலாண்மை கூட்டம்

நீர் மேலாண்மை கூட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி சின்னகருப்பசாமி கோயிலில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், அனைத்து கண்மாய் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 58 கிராம பாசன கால்வாயில் நீர் திறக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க., நகர ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வதில் உள்ள பிரச்னைகளை சங்கத்திற்குள் பேசி தீர்த்துக் கொள்வது, ஏதேனும் பிரச்னை இருந்தால் சங்கம் மூலம் நீர் வளத்துறையை அணுகி தீர்வு காண்பது, நீரை பெறுவதில் யாருக்கும், யாரும் தடையாக இருக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை