மேலும் செய்திகள்
பாலத்தில் பள்ளத்தால் அபாயம்
26-Dec-2025
சோழவந்தான்: திருவேடகத்தில் பாழடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபத்தான வகையில் உள்ளது. இங்கு வைகையாற்று படித்துறையில் துர்க்கையம்மன் கோயில் அருகே கற்களால் ஆன மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. முன்பு குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. சேதமடைந்ததால் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் இதன் கீழ்ப்புறம் உள்ள அறை சமூக விரோதிகளின் மதுக்கூடமாக மாறிவிட்டது. அறைக்குள் காலி பாட்டில்கள், கப்புகள், வாட்டர் கேன்கள் மலை போல குவிந்துள்ளன. அறையின் தரையில் 5 அடி பள்ளம் உருவாகியுள்ளது. இரவில் விளக்குகள் இல்லாததால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. தொட்டியின் மேல் செடி, கொடிகள் முளைத்து புதர் போன்று காட்சியளிக்கிறது. கட்டடத்தின் பல பகுதிகளில் காரைப் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Dec-2025