பாதையை அடைக்கும் தண்ணீர் தொட்டி
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் நடுத்தெருவில் பயன்பாடற்ற குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் முருகன் கூறியதாவது: இங்கு நடுத்தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முன்பு குடிநீர் தேவைக்காக தொட்டி அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாததால் தொட்டி பாழடைந்துள்ளது. மின் போர்டுகள், தொட்டி சேதமடைந்து காட்சிப் பொருளாக உள்ளன. ஏற்கனவே திட்டமிடப்படாமல் பாதையை ஆக்கிரமித்து தொட்டி அமைக்கப்பட்டது. அவசர காலத்தில்கூட உடல்நிலை சரியில்லாதோரை வாகனங்களில் கொண்டு செல்ல சிரமப்பட்டனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொட்டியை அகற்றி பாதையை சரி செய்ய வேண்டும் என்றார்.