உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவு நீரில் வசிக்கிறோம் கொசுக்கடியில் தவிக்கிறோம் வலைச்சேரிபட்டியில் அவலம்

கழிவு நீரில் வசிக்கிறோம் கொசுக்கடியில் தவிக்கிறோம் வலைச்சேரிபட்டியில் அவலம்

கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டி புதிய ஆதிதிராவிடர் குடியிருப்பில் கால்வாய் பராமரிப்பில்லாமல் புதர் மண்டி காணப்படுவதால் மக்கள் பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இங்குள்ள புதிய ஆதிதிராவிடர் குடியிருப்பில் 200 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதி மக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் மற்றும் உயரமான ரோட்டில் இருந்து வரும் மழை நீர் வெளியேறுவதற்கு 5 தெருக்களில் கால்வாய் அமைந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் முறையாக துார்வாராததால் கால்வாயில் மணல் நிறைந்து, புதர் மண்டி கிடக்கிறது.அப்பகுதி கலா கூறியதாவது: வீட்டை சுற்றி கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. இக் கால்வாயில் செல்லும் கழிவு மற்றும் மழை நீர் கால்வாய் முடிவில் உள்ள உறிஞ்சு குழிக்குள் செல்வதற்காக கால்வாயினுள் தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். மேலும் கால்வாயை பராமரிக்கவில்லை. அதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றத்துடன் சுகாதார கேடாக காணப்படுகிறது. கொசு உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான தொற்று நோய்கள் பரவுவதால் ஊராட்சி நிர்வாகம் உடனே கால்வாயை துார் வார வேண்டும் என்றார்.ஊராட்சி தலைவி சக்தி பிரியா கூறுகையில், ''கால்வாய் துார்வாரப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 29, 2024 06:01

விடுங்கப்பா, தேர்தல் சமயத்தில் விலையே மதிக்க முடியாத வாக்குக்கு வெட்கமே இல்லாமல் ஆயிரம், ரெண்டாயிரம், குவாட்டர், கோழி பிரியாணி, அண்டா, குண்டா, கொலுசு வாங்கினால் சரியாகப் போகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை