உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போனஸ் உயர்வு வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை

போனஸ் உயர்வு வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை

மதுரை: நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, போனஸ் உயர்வு தரவேண்டுமென கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மதுரை அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழுவினர் மனு அளித்தனர். குழுச் செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது: மதுரையின் பல்வேறு இடங்களில் நைஸ்ரக கைத்தறி வேட்டிகள், கோடம்பாக்கம் ரக சேலை, பட்டுச்சேலைகள் தயாரிக்கின்றோம். வீடுகளிலேயே ஒன்றிரண்டு தறிகள் அமைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு, நுால் பெற்று கூலி வேலை செய்கிறோம். எங்களது கூலி உயர்வு, போனஸ் உயர்வு தொடர்பான ஒப்பந்தம் நவ.7 ல் காலாவதியாகிறது. நவ. 8 முதல் ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 30 சதவீத உயர்வு, 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ