குன்றத்தில் திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயில் ஹரி பஜனை கூடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா, திருக்கல்யாணம் நடந்தது.நேற்று காலை லட்சுமி நாராயண ஹோமம், சுதர்சன ஹோமம், பரிவார ஹோமம், பூஜை நடந்தது. உற்ஸவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண அலங்காரத்தில் எழுந்தருளினர். திருக்கல்யாண வைபவம் முடிந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.