உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பளு துாக்குதல் போட்டி

பளு துாக்குதல் போட்டி

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரி மாணவிகளுக்கான பளுதுாக்குதல் போட்டி சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் நடந்தது. போட்டி முடிவுகள் 48 கிலோ எடை பிரிவில் லேடிடோக் கல்லுாரி ரோகிணி முதலிடம், மீனாட்சி அரசு கல்லுாரி மகேஸ்வரி 2ம் இடம், வேதிகா 3ம் இடம் பெற்றனர். 53 கிலோ பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி யமுனா முதலிடம், மீனாட்சி அரசு கல்லுாரி மணிஷா ஸ்ரீ 2ம் இடம் பெற்றனர். 63 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி பிரியதர்ஷினி முதலிடம், மீனாட்சி அரசு கல்லுாரி சந்தியா 2ம் இடம், அருப்புக்கோட்டை ஸ்ரீரமணா கல்லுாரி குபேரலட்சுமி 3ம் இடம் பெற்றனர். 77 கிலோ பிரிவில் வி.வி.வி., கல்லுாரி அனுரன்னிஷா பேகம் முதலிடம், அல்ட்ரா கல்லுாரி த்ரேஷா 2ம் இடம், வி.வி.வி., கல்லுாரி ஜனனி 3ம் இடம் பெற்றனர். 86 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி சிவரஞ்சனி முதலிடம், ரூபஸ்ரீ 2ம் இடம், வி.வி.வி., கல்லுாரி சிவபாரதி 3ம் இடம் பெற்றனர். 86 கிலோ எடைக்கு மேல் உள்ள பிரிவில் லேடிடோக் பூஜா முதலிடம், அர்ச்சனா 2ம் இடம், மீனாட்சி அரசு கல்லுாரி திலகபூமி 3ம் இடம் பெற்றனர். மொத்தம் 162 புள்ளிகள் எடுத்த லேடிடோக் கல்லுாரி முதலிடம், 121 புள்ளிகளுடன் மீனாட்சி அரசு கல்லுாரி 2ம் இடம், 74 புள்ளி களுடன் விருதுநகர் வி.வி.வி., கல்லுாரி 3ம் இடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை