மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி
27-Jun-2025
திருமங்கல : முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருமங்கலம் மேற்கு ஒன்றியம் மாவிலிபட்டி மீனாட்சி பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள், அன்னதானம் வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
27-Jun-2025