உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

திருப்பரங்குன்றம்: மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு சார்பில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பொருளாளர் காத்துான் பீவி தலைமை வகித்தார். இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலர் முருகன், 200 முஸ்லிம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிர்வாகிகள் செல்வகுமார், நாகரத்தினம், முத்துக்குமார், பாலமுருகன், சுப்பிரமணி, உசேனாபீவி, தர்ஹா பள்ளி வாசல் நிர்வாகிகள் ஒஜீர்கான், அக்பர்கான் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ