மேலும் செய்திகள்
ரத்த தான முகாம்
05-Oct-2025
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை, கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய தொழுநோய் பாதிப்பு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். உதவி டாக்டர் தனசேகரன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் தொழு நோய் பாதிப்பு பயனர்களுக்கு தீபாவளிக்கு அரிசி, பலசரக்கு பொருட்கள் வழங்கினார். மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் ராஜரத்தினம், சந்திரசேகர், உடற்கூறு நல கல்வியாளர் முருகேசன், ஆய்வக நுட்பனர் தமிழரசி, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சதீஷ், செவிலியர் கண்காணிப்பாளர் வனஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Oct-2025