திறப்பு விழா நடந்தும் சிகிச்சை என்னாச்சு
மேலுார்: மேலுார் மில்கேட்டில் சுகாதார நிலையம் திறப்பு விழா செய்த பிறகும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இங்கு ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு ஒருமாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. கர்ப்பிணிகள் பதிவு, பரிசோதனை, வளர் இளம் பெண்களுக்கான உபகரணங்கள் வழங்குவது, தடுப்பூசி உள்ளிட்ட தேவைகளுக்காக கட்டப்பட்ட இம்மையம் பூட்டி கிடக்கிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது : சுகாதார நிலையம் திறப்பு விழா செய்யப்பட்டு 36 நாட்கள் ஆகிறது. இதுவரை சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் மக்களின் வரிப்பணம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வீணாகி வருகின்றன. இதனால் 3 கி.மீ., தொலைவில் சந்தைப்பேட்டையில் உள்ள சுகாதார நிலையத்திற்கு செல்கிறோம். மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.