உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுக் குழு உறுப்பினர்களுக்கு வாட்ஸ் ஆப் குழு: அமைச்சர் ராஜா

பொதுக் குழு உறுப்பினர்களுக்கு வாட்ஸ் ஆப் குழு: அமைச்சர் ராஜா

மதுரை: தி.மு.க., வில் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தனி வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா தெரிவித்தார்.மதுரை பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இக்கூட்டத்திற்கு பின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் தனி வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும். மாவட்ட வாரியாக தகவல் தொழில்நுட்ப அமைப்பு சார்பில் 'வார் ரூம்' ஏற்படுத்தப்படும். புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இப்பிரிவினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.ஒன்றியம், வட்டம், நகர் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள், பிரச்னைகளை, பிரசாரங்களை 'ஹைப்பர் லோக்கல் ஆக்டிவிட்டி' முறையில் முன்னிலைப்படுத்த வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் சோஷியல் மீடியாக்களில் கணக்கு தொடங்க வேண்டும். பொதுக்குழு மூலம் நமது கருத்து 30 ஆயிரம் பேருக்கு போய் சேருகிறது என்றால், சோசியல் மீடியா மூலம் 30 லட்சம் பேருக்கு சென்று சேர்க்க முடியும் என்றார்.

'சிங்கிள் ரூம் - டபுள் ரூம்'

தி.மு.க., பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது: தற்போதெல்லாம் ஓட்டல்களில் சில கட்சியினர் 'சிங்கிள் ரூம்' எடுத்து செயற்குழு நடத்துகிறார்கள். 'டபுள் ரூம்' எடுத்து பொதுக்குழு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இங்கு நடக்கும் தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் அலைகடலென ஆர்ப்பரித்து நடக்கிறது. லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்றாலும் அதற்கான கண்ணியத்துடன் நடக்கிறது. இதுதான் தி.மு.க., என்றார்.துணைமுதல்வர் உதயநிதி, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் பாரதி, அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, தியாகராஜன், தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி., உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ