உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை : மதுரை மாவட்டத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் எவ்வளவு காலவரம்பிற்குள் அமைக்கப்படும் என கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மயில்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு:விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் உயர்நிலை கண்காணிப்புக்குழு அமைக்க அரசாணை வெளியிட ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மார்ச் 1 ல் அரசாணை வெளியிட்டது. இதுவரை கண்காணிப்புக்குழு அமைக்கவில்லை. இதனால் விதிமீறல், அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கண்காணிப்புக்குழு அமைக்கக்கோரி மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரீசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் எவ்வளவு காலவரம்பிற்குள் அமைக்கப்படும் என கலெக்டர் அக்.,25 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி