வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமிர்த எஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீடிக்கப்படும்போது, அதனை கோவை வழியாக இயக்கினால், கோவை மற்றும் பாலக்காடு ஆகிய இரு நகரங்களும் பயன்பெறும்.
மதுரை: மதுரையில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை - திண்டுக்கல் - பொள்ளாச்சி - கோவை வழித்தடம் 'மீட்டர்கேஜ்' பாதையாக இருந்தபோது மதுரை, ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, பாலக்காட்டிற்கு தினசரி ஏழு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன. ரூ. 550 கோடி மதிப்பில் அகலப்பாதையாக மாற்றும் பணியால்11 ஆண்டுகளுக்கு முன் அவ்வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பணி நிறைவுற்று 5 ஆண்டுகள் ஆகியும், மின்மயமாக்கப்பட்டும் பகலில் மதுரை - கோவை இடையே ஒரு ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா இன்டர்சிட்டி ரயில் (16722) திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு மதியம் 12:10 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் ரயில் (16721) இரவு 7:35 மணிக்கு மதுரை வருகிறது. 19 ஸ்டேஷன்களில் நின்று செல்வதால் பயண நேரம் 5 மணி நேரம் ஆகிறது.திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனுார் ஆகிய ஸ்டேஷன்களில் மட்டும் நின்று சென்றால் பயண நேரம் 4 மணி நேரமாக குறையும்.பஸ்சில் செல்வதை விட நேரமும் கட்டணமும் குறையும் என்பதால் பயணிகள் பயனடைவர். இந்த ரயிலை செங்கோட்டை வரை இயக்கினால் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி பகுதியினர் சென்னை செல்லும் வைகை, நெல்லை வந்தே பாரத் ரயில்களில் செல்வதற்கான 'கனெக்டிவிட்டி' கிடைக்கும். சிறப்பு ரயில்
தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் - கோவை இடையே பொள்ளாச்சி வழியாக 'மெமு' ரயில் இயக்கப்பட்டது. அதைதொடர்ந்து இயக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு காரைக்குடி, திருச்சி, ஈரோடு வழியாக ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து பாலக்காட்டிற்கு ஒரு ரயில் கூட இல்லை. மதுரையில் இருந்து திண்டுக்கல், பாலக்காடு வழியாக திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் 'அமிர்தா' ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதை நீட்டிப்பு செய்வதற்கு பதில் ராமேஸ்வரம் --- பாலக்காடு இடையே மதுரை, திண்டுக்கல், பழநி வழியாக மீட்டர்கேஜ் பாதையில் இயக்கியதை போன்று கூடுதலாக பாசஞ்சர் ரயில்கள் இயக்க வேண்டும்.
அமிர்த எஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீடிக்கப்படும்போது, அதனை கோவை வழியாக இயக்கினால், கோவை மற்றும் பாலக்காடு ஆகிய இரு நகரங்களும் பயன்பெறும்.