உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / என்று தீருமோ கழிவுநீர் பிரச்னை

என்று தீருமோ கழிவுநீர் பிரச்னை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் செமினிப்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்குவதால் சுகாதாரம் பாதிக்கிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் வாடிப்பட்டி ரோட்டோரம் உள்ள வடிகால் வழியாக எதிரே உள்ள தோப்பில் பாய்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அதனை அடைத்து விட்டனர். கழிவுநீர் வெளியேற வடிகால் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த ரவி கூறியதாவது: கழிவுநீரை வெளியேற்ற புதுகண்மாய் ஓடைப் பகுதி வரை ரோட்டோரம் வடிகால் கட்ட கூறியும் நடவடிக்கை இல்லை. காலனி பகுதியில் இருந்த வடிகாலை அகற்றி புதிதாக கட்டுகின்றனர். மழை நேரம் கழிவுநீர் புழு, பூச்சிகளுடன் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. புதிய வடிகால் கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் பணிகள் முடிந்த பின் பார்வையிட்டனர். கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ