உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுகாதார நிலையம் பராமரிக்கப்படுமா

சுகாதார நிலையம் பராமரிக்கப்படுமா

பாலமேடு: ‘‘பாலமேட்டில் துணை சுகாதார நிலையத்தை பராமரிக்க வேண்டும்’’ என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். இங்கு கள்ளுக்கடை 'பஸ்ஸ்டாப்' அருகே துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டாலும், முறையான பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. நுழைவாயிலில் தரையில் 'சிமென்ட்' பெயர்ந்து குண்டும் குழியுமாக, கரடுமுரடாக காட்சியளிக்கிறது. தண்ணீர் தேங்கி பாசிபடர்ந்து மோசமான நிலையிலுள்ளது. சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 'காம்பவுண்ட்' சுவரில் 'பெயின்ட்' உரிந்து கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. தெருநாய்கள் வசிக்கவும், சமூக விரோதிகள் மதுஅருந்தும் இடமாகவும் மாறி வருகிறது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை