சிலம்ப போட்டியில் வென்றவர்கள்
மதுரை : தி சாய் பாரம்பரிய கலை சங்கம் சார்பில் மதுரை கே.எம்.ஆர். சர்வதேச பள்ளியில் சிலம்பம் முதல் நிலை, 2ம் நிலை போட்டி தேர்வு நடந்தது. முதல் நிலை போட்டியில் சர்வேஷ், செல்வ தியா, பிரணவ், தன்விகா, சாய் யக் ஷித், ரபியதுள் ரிழா, சஞ்சய் நாகராஜன், ஜெரின் ஜோவிதா, சாய்ஹர்ஷன், அஜய் கிருஷ்ணன், ஜிதேஷ் சாஸ்தா, சிவ கீர்த்தனா, ஜெயிஷனா, குரு தேவ், ஹர்திக் சிவம், லியோ சர்வன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இரண்டாம் நிலை தேர்வில் தாரணி, பிரகதீஸ்வரி, மஹின ஸ்ரீ, ஜோவிதா, ரக் ஷன் , பிரசன்னா, ஹஸ்வந்த், தானுஸ்ரீ, சத்ருபாலன், கபிலேஸ்வரன், பிரணவ் நிதின் ஆகியோர் வெற்றி பெற்றனர். தாளாளர் கிருஷ்ணவேணி சான்றிதழ் வழங்கினார். முதல்வர்கள் விஜயா, சரஸ்வதி, சேர்மன் ராஜா, உடற்கல்வி ஆசிரியர் சின்னசாமி, நடுவர் முத்துகிருஷ்ணன், பயிற்சியாளர் சாந்தவேல் பாராட்டினர்.