மேலும் செய்திகள்
சிறுவனிடம் சில்மிஷம் சிறுவர்களிடம் விசாரணை
29-Mar-2025
வீடு வீடாக போதை பொருள் சப்ளை பெண் கைது
08-Apr-2025
மதுரை: மதுரை, ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆன்டனி டேவிட்ராஜ், 28; பிரபல உணவு டெலிவரி நிறுவன ஊழியர். இவர், 10 நாட்களுக்கு முன் ஆண்டாள்புரத்தில் ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றார். அங்கு, 10 வயது சிறுமியிடம் உணவு பார்சல் கொடுத்த போது சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பினார். வீட்டில் உள்ளவர்களிடம் சிறுமி தெரிவித்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம், மீண்டும் அதே பகுதிக்கு உணவு கொடுக்க வந்த இளைஞர் குறித்து சிறுமி தகவல் தெரிவித்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தெற்கு மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
29-Mar-2025
08-Apr-2025