உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கார் கவிழ்ந்ததில் பெண் பலி

கார் கவிழ்ந்ததில் பெண் பலி

வாடிப்பட்டி : கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் குடும்பத்தினர் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். மருமகன் சரத் 38, ஓட்டினார். வாடிப்பட்டி அருகே நகரி நான்கு வழிச்சாலையில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த கிணற்றின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் பிரேம்குமாரின் மனைவி ஆனந்தி 65, இறந்தார். சரத், பிரேம்குமார் 68, தப்பினர். காயமடைந்த சரத்தின் மனைவி சவுமியா 35, மகள் ஆதியா 10, மகன் அத்வித் 5, ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை