உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐ.டி., ஊழியரின் திருமணத்தை குழந்தையுடன் நிறுத்திய பெண்

ஐ.டி., ஊழியரின் திருமணத்தை குழந்தையுடன் நிறுத்திய பெண்

மதுரை : மதுரை, மகாலட்சுமி நகர் ஐ.டி., பொறியாளர் பாலச்சந்திரன், 32. இவருக்கும், தேனி பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், சூர்யா நகர் தனியார் பள்ளி ஆசிரியை உதயா, வக்கீல்கள் உதவியுடன் நேற்று அதிகாலை மண்டபத்திற்கு கைக்குழந்தையுடன் அழுதபடி வந்தார். பெண் வீட்டாரிடம், 'பாலச்சந்திரன் என்னை காதலித்து திருமணம் செய்தார். இருவருக்கும் பிறந்த குழந்தை தான் இது' என்றார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். திருமணத்திற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர். தல்லாக்குளம் மகளிர் போலீசார் விசாரித்தனர்.வக்கீல் ஜோதிமணி கூறியதாவது:உதயா, பாலச்சந்திரன், 2021 முதல் காதலித்தனர். முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பின், உதயாவுடன் பாலச்சந்திரன் சேர்ந்து வாழ்ந்தார். அப்போது திருமணம் செய்யுமாறு உதயா கேட்டதற்கு, வீட்டிலேயே பாலச்சந்திரன் தாலி கட்டினார். உதயா இரு மாத கர்ப்பமான நிலையில், அதை கலைக்குமாறு கூறினார்.அதைமீறி உதயா மே 7ல் குழந்தை பெற்றெடுத்தார். பிரசவ செலவுகளை பாலச்சந்திரன் கவனித்தார். தற்போது உதயாவிற்கு தெரியாமல் பாலச்சந்திரன் திருமணம் செய்துகொள்ள இருந்தார். உதயா எங்களிடம் தெரிவித்ததால் திருமணத்தை நிறுத்தினோம். உதயாவுடன் சேர்ந்து வாழ பாலச்சந்திரன் சம்மதித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை