பெண் தொழில்முனைவோர் விழிப்புணர்வு விழா
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தியாகராஜர் மேலாண்மை கல்லுாரியில் நாளை (செப். 26) 'வீட்டுக்கு ஒரு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் 'பெண்மை-2025' எனும் விழா நடக்கிறது. கல்லுாரி முதல்வர் செல்வலட்சுமி, பேராசிரியர்கள் மஞ்சுளா, கிருஷ்ணகுமார் கூறியதாவது: வீட்டுக்கு ஒரு பெண் தொழில் அதிபரை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தினை பெண்கள், மாணவிகளுக்கு முழுமையாக கற்றுக் கொடுத்தல், 'புதிய செயலி' உருவாக்குதல், அவற்றை கூகுளில் இணைத்தல் ஆகிய தொழில்நுட்ப விழிப்புணர்வு விழா கல்லுாரியில் நாளை காலை 8:00 முதல் மாலை 5:00 மணிவரை நடக்கிறது. பெண்கள், மாணவியரின் திறமையை வெளிக்கொண்டுவரும் வகையில், தொழில் முனைவோராக ஆர்வம் இருந்தும் வழிமுறைகள் அறியாமல் இருப்போருக்கு இந்த தொழில்நுட்ப விழா பயனுள்ளதாக அமையும். ஏற்கனவே 2600க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளலாம். கட்டணம் கிடையாது. பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றனர்.