மகளிர் கூடைப்பந்து
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் நடந்தது. முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 60 - 11 புள்ளிகளில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் செந்திக்குமார நாடார் கல்லுாரி 43 - 29 புள்ளிகளில் விருதுநகர் வன்னியபெருமாள் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 42 - 17 புள்ளிகளில் செந்திக்குமார நாடார் கல்லுாரியை வீழ்த்தியது. 3ம் இடத்திற்கான போட்டியில் பாத்திமா கல்லுாரி 32 - 19 புள்ளிகளில் வன்னியபெருமாள் கல்லுாரியை வீழ்த்தியது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா பாராட்டினர்.