உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவக்கம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவக்கம்

பாலமேடு; ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜன.15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லுாரில் அரசு சார்பில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும் விழா ஜன. 3ல் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து பாலமேடு மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல், பார்வையாளர் மாடங்களுக்கு வண்ணம் பூசும் பணி துவங்கியது. ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் பகுதிகள், போட்டி நடக்கும் மஞ்சமலை ஆற்றுப்பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதேபோல் அலங்காநல்லுாரில் காளைகளை சேகரிக்கும் பகுதி, காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இயந்திரம் மூலம் சுத்தம் செய்து மரத்தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், மடத்து கமிட்டியினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !