உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக அமைதி தினம்

உலக அமைதி தினம்

மதுரை: மதுரையில் டாக்டர் திருஞானம் துவக்கப் பள்ளி மாணவர் மன்றம் சார்பில் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டது. மன்றத் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் மதுமிதா முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் சரவணன் பேசுகையில், 'போர் இல்லா உலகம் படைக்க வேண்டும். அன்பு வழியில் பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும். மனித நேயம் போற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் நட்பு பாராட்ட வேண்டும்' என்றார். ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை