உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக அமைதிக்கான கருத்தரங்கம்

உலக அமைதிக்கான கருத்தரங்கம்

மதுரை, : மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரியில் காந்தி மியூசியம் சார்பில் 'உலக அமைதிக்கான வழிமுறைகள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் மாரிச்செல்வம் வரவேற்றார். முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார்.எத்தியோப்பியா பேராசிரியர் சேனாதிபதி பேசுகையில், 'நீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம், பொருளாதார ஸ்திரத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை சாத்தியமாக்க உலக நாடுகள் அமைதி வழிமுறையை பின்பற்ற வேண்டும்' என்றார்.மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசுகையில், 'உலக தலைவர்கள் காந்திய சிந்தனைக்கு முக்கியத்துவம் தந்தால் தான், உலகளாவிய அமைதி சாத்தியமாகும்' என்றார்.மியூசிய செயலாளர் நந்தா ராவ், கல்லுாரி செயலாளர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ