உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேத வியாசர் வழிபாடு

வேத வியாசர் வழிபாடு

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் குருபூர்ணிமா வழிபாடு நடந்தது. வேதவியாசர், ஆதி சங்கரர் குரு திருவடி வேத சுலோகங்கள், வள்ளலார் திருவடி பதிகங்கள், குரு மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பிரார்த்தனை செய்தார்.பிரதோஷம்: வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயில் விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ கால அபிஷேகம், ஆராதனைகள்நடந்தன. சேவார்த்திகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாக தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ