உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளிகளில் யோகா தின விழா..

பள்ளிகளில் யோகா தின விழா..

உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் தலைமையில் நடந்தது. ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார்.ஆசிரியர் அருண்குமார், இதய நிறைவு தியான பயிற்சி மையம் சார்பில் நிர்மலா, உடற்கல்வி ஆசிரியர் ஜேக்கப் தேவானந்த் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு யோகா விழிப்புணர்வு, பயிற்சி வழங்கினர். யோகாவின் நன்மைகள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வம், ஜெயசீலன், சுஜேந்திரன், தீபா, உதவி தலைமையாசிரியர்கள் செய்திருந்தனர்.

திருமங்கலம்

கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு பள்ளியில் மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மருத்துவர் அமுதா பயிற்சியளித்தார்.தலைமை ஆசிரியர் மோகன், உடற்கல்வி ஆசிரியர் பிரபு முன்னிலையில் 300 மாணவ மாணவிகள் முத்ரா, கண் பயிற்சி, பிராணயாமம், ஆசனங்கள் செய்தனர்.சாத்தங்குடி சத்ரிய நாடார் உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அமுதா பயிற்சி அளித்தார். தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் உமா தலைமை வகித்தார். நோயாளிகள், செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆயுஷ் மருத்துவ அலுவலர் அமுதா பயிற்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி