குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த காரைமேடு தோப்புத் தெரு பகுதியில் சுக்கான் குளத்தில் டி.மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் குளித்தனர்.அப்போது, டி.மணல்மேடு மெயின் ரோட்டை சேர்ந்த வெற்றி வீரன் மகன் மாவீரன், 9, பிரகாஷ் மகன் சக்தி, 9, ஆகிய இருவரும் குளத்தில் இருந்த ஆலமரத்தில் ஏறி, தண்ணீரில் குதித்து விளையாடினர். இருவரும் குளத்தில் மூழ்கி இறந்தனர். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.