மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் கைது
07-Feb-2025
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 3 வயது மகள், நேற்று முன்தினம் அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையில் கை கழுவ சென்ற சிறுமியை காணவில்லை.ஆசிரியை மற்றும் உதவியாளர் தேடியபோது, அங்கன்வாடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொள்ளிடம் போலீசார் சந்தேகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும், 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கை கழுவ வந்த சிறுமியை, யாரும் இல்லாத இடத்திற்கு சிறுவன் அழைத்துச் சென்று, பாலியல் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளான். சிறுமி சத்தம் போட்டதால், ஆத்திரத்தில் கல்லால் அடித்ததில், தலை, முகம் மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, சிறுவனை நேற்று காலை தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
07-Feb-2025