உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / விஷம் கலந்த மது குடித்தவர் உயிரிழப்பு

விஷம் கலந்த மது குடித்தவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, விஷம் கலந்த மதுவைக் குடித்த மரணம் அடைந்தார். அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர். மயிலாடுதுறை அருகே பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு,32. மனைவியை பிரிந்து வாழும் விரக்தியில், கடந்த 9ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தார். அப்போது, வீட்டுக்கு வந்த அவரது நண்பர் ஜெரால்டு,24;வும் அதே மதுவைக் குடித்தார். மயங்கிச் சரிந்த இருவரையும் இருவரையும் உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு ஜெரால்டு உயிரிழந்தார்.இதுகுறித்த புகார்படி பெரம்பூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். உடற்கூறு ஆய்வுக்குப் பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன் தினம் மதியம் ஜெரால்டு உடலை ப்ரீசர் பாக்சுடன் செம்பனார்கோவில்- நல்லடை மெயின் ரோட்டில் கடலி பாலத்தில் வைத்து, ஜெரால்டை திட்டமிட்டு கொலை செய்த ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும். ஜெரால்டு குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதித்தது.தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ், மயிலாடுதுறை டி.எஸ்.பி., திருப்பதி ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை