மேலும் செய்திகள்
ஆமைகள் இறப்பு அதிகரிப்பு: மீனவர்கள் அச்சம்
03-Feb-2025
ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் அரிய வகை ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள், கடலியல் சூழலை பாதுகாக்கும் தன்மையுடையவை. இந்த ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் நவம்பர் துவங்கி பிப்ரவரி இறுதி வரை தமிழக கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு, கடலுக்கு திரும்புவது வழக்கம். தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் ஆயிரக்கணக்கான ஆலிவ் ரெட்லி ஆமைகள் மயிலாடுதுறை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்கின்றன. இந்நிலையில், கரைக்கு வந்து திரும்பும் ஆமைகள் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்டும், மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல், படகுகளின் இன்ஜின்களில் சிக்கி அடிபட்டும் இறக்கின்றன. இறந்த ஆமைகள், திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், பழையார் கடற்கரையில் ஒதுங்கி வருகின்றன.
இதுவரை இறந்து கரை ஒதுங்கிய, 45 ஆமைகளை வனத்துறையினர் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு பின், கடற்கரையிலேயே புதைத்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
03-Feb-2025