உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / அரசு மருத்துவமனையில் ஊழியரை தாக்கியவர் கைது

அரசு மருத்துவமனையில் ஊழியரை தாக்கியவர் கைது

மயிலாடுதுறை,: சீர்காழி அருகே அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த தம்பதி பாலமுருகன் - பிருந்தா. இருவரும், கடந்த 8ம் தேதி டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.இருவரையும் மீட்டு வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.இதனை அறிந்த பிருந்தா வின் உறவினர்கள் வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து, பணியில் இருந்த டாக்டர் மற்றும் ஊழியர்களை தரக் குறைவாக பேசி, முறையான சிகிச்சை அளிக்க வில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சுகாதாரப் பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து டாக்டர் கஜேந்திரன் வைத்தீஸ்வரன்கோவில் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அரசு மருத்துவமனை சுகாதாரப் பணியாளர் வீரமணியை தாக்கியதாக, தலைஞாயிறு தெற்கு தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் முகேஷ்,26, என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளரை முகேஷ் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை