மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை:திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாகாலாந்து மாநில கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார்.மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்டவீரட்ட தலங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.இக்கோவிலில் ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு நேற்று மாலை நாகாலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் உறவினர்களுடன் வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர் கோ பூஜை, கஜ பூஜை செய்து கள்ள விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகளை தரிசனம் செய்தார். பூஜைகளை கணேஷ் குருக்கள் செய்தார்.கவர்னர் வருகையையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3