| ADDED : ஏப் 20, 2024 04:54 AM
மயிலாடுதுறை : மயிலாடுதுறை லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் சுதா தனது ஓட்டை பதிவு செய்யவில்லை.மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் 17 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இவர்களில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., வேட்பாளர் பாபு தனது சொந்த ஊரான எடுத்துக்காட்டி சாத்தனூரிலும், பா.ம.க., வேட்பாளர் ஸ்டாலின் ஆடுதுறையிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் நாகப்பட்டினத்தில் தங்களது ஓட்டுகளை செலுத்தி, ஜனநாயக கடமையாற்றினார்.காங்., வேட்பாளரான வக்கீல் சுதா, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவர், வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தனது ஓட்டை மயிலாடுதுறை தொகுதிக்கு மாற்றவில்லை.இந்நிலையில் தேர்தல் பணி மற்றும் ஓட்டுபதிவினை கவனிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போடாமல், தனது ஜனநாயக கடமையில் இருந்து தவறியுள்ளார். இது இண்டியா கூட்டணி கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.